Tamilisai: ஆளுநர் பதவியும் போச்சு..எம்பியும் கிடைக்கல..கட்சியிலும் மதிப்பு இல்ல-விரக்தியின் உச்சத்தில் தமிழிசை

First Published | Jun 13, 2024, 8:33 AM IST

BJP Tamilisai Soundararjan : இரண்டு மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அரசியல் களத்திற்கு வந்த தமிழிசைக்கு எதிர்பாராத ஏற்பட்ட தோல்வியால் அமைச்சர் பதவியும் கிடைக்காமல், கட்சியிலும் உரிய மதிப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

tamilisai with her father kumari anandan

தமிழிசையும் அரசியல் களமும்

பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தான் தமிழிசை,  காங்கிரஸ் மூத்த தலைவர் குமரின் ஆனந்தனின் மகள், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பிஎஸ் பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ பட்டமும் பெற்றார் தமிழிசை. பின்னர் கனடாவில் மருத்துவ பயிற்சி பெற்றார். தமிழகத்தில் இரு பெரும் அரசியல் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரின் தலைமையில் தமிழிசையின் திருமணம் நடைபெற்றது.

tamilisai

பாஜகவில் தமிழிசை

வாஜ்பாயின் மீது இருந்த ஈர்ப்பு, மரியாதையால் 1999-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2001-ம் ஆண்டு பாஜகவின் மாநில மருத்துவ செயலாளராக நியமிக்கப்ப்ட்டார். பின்ன பின்னர் 2010-ம் ஆண்டு தமிழக பாஜக மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் 2013-ம் ஆண்டு பாஜக தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2014-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவரானார் தமிழிசை சௌந்தரராஜன். தமிழகத்தில் பாஜக பிரபலமடைவதற்கு தமிழிசையும் முக்கிய காரணமாக இருந்தார். 

Tamilisai : தேர்தல் அரசியலில் மீண்டும் ரீ- எண்ட்ரி.. தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த அரசியல் பாதை..

Tap to resize

இரண்டு மாநில ஆளுநர்

தமிழக சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் 5 முறை போட்டியிட்ட அவர் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. இருந்த போதும் பாஜகவிற்காக தொடர்ந்து களப்பணியாற்றி வந்தார். எந்த போராட்டமாக இருந்தாலும் முதல் ஆளாக இருப்பார். அப்போது தான் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை 2019ஆம் ஆண்டு களம் இறக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் பாஜக தலைமை அவரை கை விடவில்லை. அடுத்த சில மாதங்களிலேயே தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து புதுவை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
 

அண்ணாமலையுடன் மோதல்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் அரசியல் களத்திற்கு நுழைந்தார். தென் சென்னை தொகுதியில் குறிவைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மீண்டும் சுறு சுறுப்பாக அரசியல் பணியை செய்ய தொடங்கினார். ஆனால் தமிழிசை பாஜகவில் இருந்து சென்ற பின்னர் கட்சியில் பல வித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவர் தெரிந்திருக்கவில்லை. பாஜக மூத்த தலைவர்கள் அண்ணாமலைக்கு பயந்து ஓரமாக இருந்த நிலையில், தமிழிசை பரபரப்பான பேட்டி கொடுக்க தொடங்கினார்.

எச்சரித்த அமித்ஷா

இதனால் அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் மோதல் உருவானது. யார் பெரியவர் என்ற போட்டி தொடங்கியது. இதனை பயன்படுத்திய அண்ணாமலையின் வார் ரூம் நிர்வாகிகள் தமிழிசையை விமர்சிக்க தொடங்கினர். இதற்கு தமிழிசையும் பதிலடி கொடுத்தார். இதனால் பாஜகவில் அதிகார போட்டி உருவாகியிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. இதன் அடுத்த கட்டம் தான் பொது வெளியில் தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலைக்கு ஆதரவாக எச்சரித்தது.

Amit Shah : அண்ணாமலையுடன் மோதல்..! தமிழிசையை நேரடியாக எச்சரித்த அமித்ஷா?

விரக்தியில் தமிழிசை

இரண்டு மாநில ஆளுநர் பதவி என்ற பந்தாவாக இருந்த தமிழிசை, மத்திய அமைச்சர் ஆகலாம் என்ற நம்பிக்கையுடன் வந்தவருக்கு தேர்தலும் கை கொடுக்கவில்லை, கட்சியும் புதிதாக மாறி இருப்பது தமிழிசையை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதன் காரணமாக என்ன செய்யலாம் என்ற குழப்பமான மன நிலையில் தமிழிசை உள்ளதாக கூறப்படுகிறது. 

Latest Videos

click me!