Tomato Onion Price
தக்காளி, வெங்காயம் விலை
சமையலுக்கு முக்கிய தேவை காய்கறியாகும், அந்த வகையில் தக்காளி இல்லாமல் உணவு சமைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று, அதன் படி மற்ற காய்கறிகளை இல்லத்தரசிகள் வாங்குகிறார்களோ இல்லையோ, தக்காளி மற்றும் வெங்காயத்தை மட்டும் அதிகளவில் வாங்குவார்கள். இதனால் காய்கறி சந்தைக்கு மற்ற பச்சை காய்கறிகளை விட தக்காளி மற்றும் வெங்காயம் பல லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இந்த நிலையில் தற்போது ஃபெஞ்சால் புயலின் பாதிப்பால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Tomato Onion Price Hike
உயர்ந்த தக்காளி விலை
தக்காளியை பொறுத்தவரை மழையில் தக்காளி செடி பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி செடியிலேயை அழுகியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேடு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு வார காலத்திற்குள் 100 சதவிகிதம் மேல் அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிலோ தக்காளி 50 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tomato and Onion Price in Tamilnadu
ஒரு கிலோ தக்காளி விலை என்ன.?
சேலம் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் என உயர்ந்துள்ளது. இதே போல வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் என தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சர் தற்போது தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் வெங்காயம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Onion Price Today
வெங்காயத்தின் விலை என்ன.?
இந்த நிலையில் சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ள தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை போட்டி போட்டு உயர்ந்து வருவதால் கிலோ கணக்கில் வாங்கி சென்ற பொதுமக்கள் அரை கிலோ ஒரு கிலோ அளவிற்கே வாங்கும் நிலை உள்ளது. இதனால் சமையலில் குறைந்த அளவே தக்காளி மற்றும் வெங்காயத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
vegetable price
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும். குடை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
koyambedu vegetable
கேரட் ஒரு கிலோ எவ்வளவு.?
பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 முதல் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price hike
முருங்கைக்காய் ஒரு கிலோ 250 ரூபாய்
இஞ்சி ஒரு கிலோ 160க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது