School College Holiday: ஜாக்பாட்! 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

First Published | Dec 5, 2024, 6:43 PM IST

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளதால், நிவாரணப் பணிகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Cyclone Fengal

வங்கக் கடலில் கடந்த 26ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல் கணிக்க முடியாமல் போக்கு காட்டி வந்தது. முதலில் சென்னை உள்ளிட்ட பகுதிகள் பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை புரட்டி எடுத்தது. 

villupuram Heavy Rain

இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் கடும் சேதமடைந்துள்ளன. பல கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: வீடு தேடி வரும் டோக்கன்! யாருக்கெல்லாம் 2000 ரூபாய்? எப்போது கிடைக்கும்? முழு விவரம்!

Tap to resize

School News

இந்த மாவட்டத்தில் இன்னும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல்  மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. 

School Holiday

இந்நிலையில் மழை நிவாரணப் பணிகள் காரணமாக விழுப்புரத்தில் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு இதோ!

Viluppuram District Collector

அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் அடுத்து வரும் 9ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என  மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். தொடர்ந்து 6 நாட்களாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!