CM Stalin
தமிழ்நாட்டில் நவம்பர் 26ம் தேதி முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக கடுமையான மழைப்பொழிவு விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.2000 வழங்கிட உத்தரவிடப்பட்டது.
Token
ஃபெஞ்சல் புயல் நிவாரண தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் (விழுப்புரம் / கடலூர்) மண்டல இணைப்பதிவாளர் அளவில் தொகை வழங்கப்படவுள்ள தேதியினை முடிவு செய்து டோக்கன்களை இன்று முதல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் முற்பகல் 50 பேருக்கும் பிற்பகல் 50 பேருக்கும் நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கவும், இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 100 பேர் மற்றும் பிற்பகல் 100 பேர் என 200 பேருக்கு நிவராணக் தொகை விநியோகிக்க ஏதுவாக டோக்கன்கள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Ration Shop
விற்பனையாளர்கள் டோக்கன்களில் நிவாரணத் தொகை பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி வீடுகளுக்கு நேரடியாக சென்று இன்று முதல் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கன்களை விநியோகிக்கும் போது இதற்கென மண்டல இணைப்பதிவாளர்களிடம் தொடர்புறுத்தப்பட்டுள்ள படிவத்தில் குடும்ப அட்டைதாரரிடமோ அவர்களது குடும்பத்தில் உள்ள நபரிடமோ ஒப்புகை பெறப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு இதோ!
Tamilnadu Government
டோக்கன்கள் வழங்கப்படும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்த்திடவும், எவ்விதமான இடர்பாடுகளும், ஏற்படாத வண்ணமும், புகாருக்கு இடமின்றியும் வழங்கப்படுவதை காவல்துறையுடன் ஒருங்கிணைந்து மண்டல இணைப்பதிவாளர் தக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.