அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பால் மாணவர்களுக்கு விடுமுறை இல்லையா.? வெளியான முக்கிய அறிவிப்பு

First Published | Dec 6, 2024, 7:08 AM IST

Half Yearly Exams Postponed : ஃபெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனவரி மாதம் அரையாண்டு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, 

Heavy Rain In Tamilnadu

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் ஃபெஞ்சால் புயலின் பாதிப்பால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள், விவசாய பயிர்கள் மூழ்கியது. கால்நடைகள் உயிரோடு அடித்து செல்லப்பட்டது. வெள்ள பாதிப்பில் இருந்து இன்னும் ஒரு சில மாவட்டங்கள்  மீள முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக விழுப்புரம் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளில் சுற்றுசுவர் இடித்து விழுந்துள்ளது. மோசமான நிலையில் இருப்பதால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு பாடங்களை முடிக்க முடியாத சூழல் உருவானது. 

School Exam Date

அரையாண்டு தேர்வு நடைபெறுமா.?

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என ஏற்கவிக்கப்பட்ட நிலையில் தற்போது நடத்த முடியாத சூழல் உருவானது. இந்தநிலையில் வெள்ளம் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,

  ஃபெஞ்சால் புயலின் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் கடலூர். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பள்ளி மாணவர்களின் நலன்கருதி நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகளை இம்மாவட்டங்களில் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.

Tap to resize

school exam

தேர்வு ஒத்திவைப்பு- புதிய தேதி அறிவிப்பு

அதனைத்தொடர்ந்து. கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை 02.01.2025 முதல் 10:01.2025 ஆம் தேதிக்குள் நடத்திடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தனியாக தேர்வுகளை நடத்திடும் வகையில் இதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்டுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heavy rain school Holiday

அரையாண்டு விடுமுறை எப்போது.?

அதே நேரத்தில் மழை நீர் வடிந்த பிறகு முறையாக பள்ளி திறக்கும்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்திடவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஏதேனும் முடிக்கப்படாமல் இருந்தால் அதனை முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடைபெறாத நிலையில் விடுமுறை அறிவிக்கப்படுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறுகையில், இம்மாவட்டங்களுக்கும் அரையாண்டு விடுமுறைக் காலம் 24.12.2024 முதல் 01.01.2025 வரை பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Videos

click me!