ஏறிய வேகத்தில் இறங்கிய தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவு தான.? துள்ளி குதிக்கும் இல்லத்தரசிகள்

Published : Nov 01, 2025, 07:48 AM ISTUpdated : Nov 01, 2025, 07:49 AM IST

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதேசமயம், தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

PREV
14

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காய்கறிகள் தான். அந்த வகையில் காய்கறிகள் இல்லாமல் சமையல் சிறக்காது. எனவே காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்நு மூட்டை, மூட்டையாக- லாரி லாரியாக காய்கறிகள் குவிந்து வருகிறது. 

 கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. கத்திரிக்காய் விலை எப்போதும் 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல வெண்டைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

24

அதே நேரம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தக்காளி விலையானது அதிகரித்திருந்து. ஒரு கிலோ 60 ரூபாயை தாண்டியது. இதனால் குறைவான அளவே இல்லத்தரசிகள் வாங்கி செல்லும் நிலை நீடித்தது. இந்த நிலையில் தக்காளி விலை தற்போது சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 30 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

100 ரூபாய்க்கு 3 முதல் 4 கிலோ தக்காளி விற்பனையாகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே பச்சை காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தாலும் தக்காளியின் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், 

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

44

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், 

பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories