கனமழை விடுமுறையை ஈடுசெய்ய இன்று செயல்படுவதாக இருந்த செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் துறை சார்பில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுவதால், இந்த விடுமுறை அறிவிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாவே விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எதிர்பாராத மழை பெய்தது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தன.
24
கடந்த 22ம் தேதி விடுமுறை
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 22ம் தேதி செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்ததால் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
34
நவம்பர் 1ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதியான இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் துறை சார்பில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக நியமனம் செய்யப்பட்டு உள்ள தொடர்புடைய ஆசிரியர்கள் இன்று நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர். ஆகையால் சனிக்கிழமை வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. எனவே மாவட்டத்தில் இன்று எந்த பள்ளியும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.