8 கிலோ தக்காளி 100 ரூபாய்.! கூடை கூடையாக அள்ளிச் செல்லும் இல்லத்தரசிகள்

First Published | Jan 1, 2025, 9:34 AM IST

சமீபத்தில் உச்சத்தை தொட்ட தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தற்போது சரிந்துள்ளது. அதிகரித்த வரத்து காரணமாக, வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், தக்காளி கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரையிலும் விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

tomato onion

சமையலும் காற்கறிகளும்

சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகள் ஆகும்.  அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது என்பது சாத்தியமில்லாத காரியம். எனவே காய்கறி சந்தையில் எது வாங்குகிறார்களோ இல்லையோ தக்காளி வெங்காயத்தை மட்டுமே இல்லத்தரசிகள் அதிக அளவில் வாங்கி செல்வார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயத்தின் விலையானது வாங்க முடியாத அளவிற்கு உச்சத்தை தொட்டது.

உச்சத்தை தொட்ட விலை

ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை தக்காளி வெங்காயம் விலையானது இருந்தது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி சென்ற இல்லத்தரசிகள் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை மட்டுமே வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் சமையலிலும் தக்காளி இல்லாத உணவுகள் சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் மாத பட்ஜெட்டில் தக்காளி வெங்காயம் வாங்குவதற்கு என தனியாக பண ஒதுக்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது.

Tap to resize

விலையை குறைக்க நடவடிக்கை

இந்த நிலையில் தான் தக்காளி வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன்படி மக்கள் கூடும் இடங்களில் வெங்காயம் குறைவான விலையை விற்பனை செய்யப்பட்டது. தமிழக அரசின் பண்ணை பசுமை மையங்களில் தக்காளி வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஓரளவு விலையானது கட்டுப்படுத்தப்பட்டது. இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர முடியாத நிலையே உருவானது.

குறைந்தது வெங்காயம் விலை

இந்த நிலையில் தான் காரிப் தருவ வெங்காய வரத்து அதிகரித்த காரணத்தால் வெங்காயத்தின் விலையானது சரசரவென குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையான வெங்காயத்தின் விலையானது தற்போது குறைந்துள்ளது. வெங்காயத்தின் தரத்தை பொறுத்து  ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சரிந்தது தக்காளி விலை

தக்காளி விளைச்சலும் அதிகரித்துள்ளதன் காரணமாக காய்கறி சந்தைகளுக்கு அதிக அளவு தக்காளி மூட்டை மூட்டையாக வந்துள்ளது இதனால் விலையானது அடிமட்டத்திற்கு சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 முதல் 20ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதே நேரத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் 8 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கூடை கூடையாக தக்காளியை வாங்கி சென்று வருகின்றனர்.

காய்கறி விலை என்ன.?

இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறி விலையும் சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 35ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Latest Videos

click me!