10ம் வகுப்பு மாணவர்கள் ரெடியா? ஜனவரி 2-ம் தேதி வரை தான் டைம்! அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு!

Published : Dec 31, 2024, 07:51 PM ISTUpdated : Dec 31, 2024, 08:10 PM IST

School Student: தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

PREV
14
10ம் வகுப்பு மாணவர்கள் ரெடியா? ஜனவரி 2-ம் தேதி வரை தான் டைம்! அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு!
School Student

தமிழகத்தில் 2024-25ம் ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிகல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதியும் தொடங்க உள்ளது. அதற்கான பணிகளை அரசு தேர்வு இயக்கம் தீவிரமாக செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர் பட்டியலில் வரும் ஜனவரி 2ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

24
Directorate of Government Examinations

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் கடந்த டிசம்பர் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவர்களை சேர்க்கவும், இறப்பு/ மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது.

34
Public Exam

இதையடுத்து அனைத்து வித உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஜனவரி 2-ம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும்.

44
School Student News

அதேநேரம் இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பெயர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை தன்னிச்சையாக நீக்கக்கூடாது. சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்னரே அத்தகைய மாணவர்களை இறுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories