கொட்டிக்கிடக்கும் தக்காளி, வெங்காயம்.! பை நிறைய அள்ளும் மக்கள்- ஒரு கிலோ இவ்வளவா.?

Published : Oct 17, 2025, 10:00 AM IST

காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தையில் அவற்றின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறைந்ததால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

PREV
13

காய்கறிகள் சமையலில் முக்கியமான பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை சுவையையும் ஊட்டச்சத்தையும் சேர்க்கின்றன. எனவே காய்கறிகளை வாங்க எப்போதும் காய்கறி சந்தையில் கூட்டம் கூட்டமாகவே காணப்படும். அந்தளவிற்கு காய்கறிகளும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லாரி நிறைய காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. 

அந்த வகையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலையும் தற்போது சற்று குறைந்துள்ளது. குறிப்பாக சமையலில் முக்கிய தேவையாக உள்ள தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக இல்லதரசிகள் போட்டி போட்டி வாங்கி செல்கிறார்கள்.

23

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், 

வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் 1 கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

33

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 35 ரூபாய்க்கும், 

பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

Read more Photos on
click me!

Recommended Stories