லாரி லாரியாக வந்தாலும் தக்காளி, வெங்காயம் விலை உயர்வு! ஒரு கிலோ எவ்வளவு? காய்கறி நிலவரம் என்ன?

Published : May 22, 2025, 11:38 AM ISTUpdated : May 22, 2025, 11:43 AM IST

கனமழையால் தக்காளி, வெங்காயம் விலை உயர்வு. கோயம்பேட்டில் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

PREV
15
தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சாம்பார் முதல் பிரியாணி வரை தக்காளி, வெங்காயம் சமையலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விலையானது கோடை மற்றும் மழை காலங்களில் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரத்து குறைந்தன் காரணமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்தது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

25
உச்சத்தை தொட்ட தக்காளி, வெங்காயம் விலை

இதனால் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே எப்போது தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல பெட்டி பெட்டியாக தக்காளி மற்றும் மூட்டை மூட்டையாக வெங்காயம் வரத்து அதிகரித்ததை அடுத்து விலை குறைந்தது. ஆனால் தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட வெங்காயம் இன்று ரூ.50-க்கும், தக்காளி ரூ.25-ல் இருந்து ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

35
தக்காளி விலை

கடந்த சில நாட்களாக 100 ரூபாய்க்கு 6 முதல் 8 கிலோ வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை மேலும் உயரக்ககூடும் என்பதால் இல்லத்தரசிகள் போட்டி போட்டுக் கொண்டு கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர். மேலும் கர்நாடகா, மகாராட்டிராவில் கனமழை எதிரொலியால் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

45
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

55
அள்ளிச்செல்லும் மக்கள்

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories