திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் தமிழ்நாட்டின் சில முக்கிய ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், ''சென்னை எழும்பூரில் இருந்து 24-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16127), சாலக்குடி-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படும். சாலக்குடியில் இந்த ரயில் நிறுத்தப்படும்.
24
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்
ஹவுராவில் இருந்து வரும் ஜூன் 9-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 12665), வள்ளியூர்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படும். இந்த ரயில் வள்ளியூரில் நிறுத்தப்படும்.
தாம்பரத்தில் இருந்து வரும் ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (வ.எண்: 20691), நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படும். நெல்லையுடன் நிறுத்தப்படும்.
34
திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11ம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 20692), நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும்.
திருச்சியில் இருந்து வரும் ஜூன் 11ம் தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 22627), நெல்லை-திருவனந்தபுரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படும். இந்த ரயில் நெல்லையுடன் நிறுத்தப்படும்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 11ம் தேதி காலை 11.35 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் (வ.எண்ள் 22628), திருவனந்தபுரம்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. நெல்லையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து வரும் ஜூன் 11ம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16321) நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. வள்ளியூரில் இருந்து காலை 8.26 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்'' என்று கூறப்பட்டுள்ளது.