அடுத்த 10 நாட்களுக்கு மேற்கு மாவட்டங்களில் கனமழை! சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!

Published : May 22, 2025, 10:16 AM ISTUpdated : May 22, 2025, 10:17 AM IST

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

PREV
15
கோடை மழை

தமிழகத்தில் பிப்ரவரி மாதல் முதலே கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி சுட்டெரித்தது. இதனால் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் பொதுமக்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதலே தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக வெப்பநிலையும் குறைந்து காணப்படுகிறது.

25
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் கேரளாவில் அடுத்த 3 அல்லது 4 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்திருந்தது. இதனிடையே கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

35
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக இன்று மற்றும் 23ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

45
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இந்நிலையில் தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை முதல் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை முதல் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

55
சுற்றுலா செல்லும் பொது மக்களுக்கு எச்சரிக்கை

அதாவது கோவை - வால்பாறை, நீலகிரி- கூடலூர், கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் 20 செ.மீ வரைக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகையால் நீலகிரி, வால்பாறை, சிக்மகளூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories