கர்நாடகாவில் இருந்து வேளாண்கண்ணி நோக்கிச் சென்ற வேன், தஞ்சை அருகே அரசு பேருந்து மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகாவில் இருந்து 11 பேருடன் டெம்போ டிராவல்ஸ் வேன் ஒன்று வேளாண்கண்ணி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வேன் தஞ்சை செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்துக்கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் திருச்சியை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
23
4 பேர் சம்பவ இடத்திலேயே பலி
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
33
பலி எண்ணிக்கை உயர்வு
இதில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவந்துள்ளது. ஆரோக்கியதாஸ் (48) ஜான் பாஸ்கோ (63), நளினி (50), வேன் டிரைவர் ஜெகதீசன் (48), செல்சியா பெயர் விபரம் மட்டும் கிடைத்துள்ளது. பேருந்தில் இருந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா வந்த இடத்தில் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.