தாறுமாறாக குறைந்த தக்காளி, வெங்காயம் விலை.! லாரி லாரியாக வரும் காய்கறிகள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

First Published | Jan 6, 2025, 7:31 AM IST

கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை, தற்போது சரிந்துள்ளது. காரிப் பருவ காய்கறி வரத்தாலும் விலை குறைந்துள்ளது. 

Vegetable

சமையலும் காய்கறிகளும்

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காய்கறிகள் தான், சமையலில் காய்கறிகளின் பங்கு முக்கியமானது. பொரியல், கூட்டு என சமைத்தாலும் கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கு தேவைப்படும். இதோடு சேர்ந்து மிகவும் தேவையானது தான் தக்காளி மற்றும் வெங்காயம். இதன் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை அதோ கதி தான்.

மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும். ஏனென்றால் மற்ற காய்கறிகளை விட தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை அதிகமாகும், இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது.
 

tomato price

தக்காளி, வெங்காயம் விலை

அதன் படி போட்டி போட்டு தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 120 ரூபாய்க்கு விற்பனையானால் தக்காளி விலை 80 முதல் 100 ரூபாயை தொடும். இதனால் கடந்த சில மாதங்களாக குறைந்த அளவிலையே தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கும் நிலை உருவானது. எனவே மக்களின் பாதிப்பை உணர்ந்த மத்திய மற்றும் மாநில அரசு குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. இதன் படி வெங்காயத்தை மூட்டை, மூட்டையாக ரயில்களின் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tap to resize

tomato price

விலையை குறைக்க திட்டம்

மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டடது. இதே போல தமிழக அரசும் பன்னை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்தது. ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய அளவில் தக்காளி மற்றும் வெங்காயம் கிடைக்காத நிலை நீடித்தது.

எனவே எப்போது காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும் என பொதுமக்கள் காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல் காரிப் பருவ காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலையானது சரிய தொடங்கியது.

tomato

வரத்து அதிகரிப்பு

தற்போது சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தக்காளியின் விலையும் அடிமட்டத்திற்கு சரிந்துள்ளது. ஒரு கிலோ 12 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பனியின் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக  காய்கறிகளின் விலையானது இன்று சற்று அதிகரித்துள்ளது.

ONION

உயரும் காய்கறிகளின் விலை

வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

vegetable price

இன்றைய காய்கறி விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 12 ரூபாய் முதல் 27 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Latest Videos

click me!