MK Stalin RN Ravi
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து ஆளுநருடன் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை தமிழக ஆளுநர் ரவியின் உரையோடு சட்டப்பேரவை கூட்டமானது தொடங்கவுள்ளது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையை உரிய முறையில் வாசிக்காததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளும் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது.
ஆளுநர் உரையும் சர்ச்சையும்
சரியாக காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தனது பேச்சை தொடங்கினார். இப்புத்தாண்டில் நமது மாநிலத்தில் மகிழ்ச்சியும், வளமும், நலமும் தழைத்தோங்க எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த இந்த அரசின் உயர்ந்த நோக்கங்களை, காலத்தை வென்ற அய்யன் திருவள்ளுவரின் குறள் ஒன்றைக் குறிப்பிட்டு, எனது உரையை தொடங்க விரும்புகின்றேன். "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து". அதாவது, மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்று 4 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
வெளியேறிய ஆளுநர் ரவி
தொடர்ந்து, தனது உரையை வாசிக்காமல், தேசிய கீதம் குறித்த சில கருத்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டு, இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறி விடைபெற்று இருக்கையில் அமர்ந்தார். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே, சுதாரித்துக்கொண்ட சபாநாயகர் அப்பாவு, கவர்னர் உரையை தமிழில் வாசிக்கத் தொடங்கினார். மொத்தம் 46 பக்கங்களை கொண்டதாக கவர்னரின் உரை இருந்தது. இந்த உரையில், மத்திய அரசின் நடவடிக்கைகளை குற்றம்சாட்டியும், மாநில அரசின் நடவடிக்கைகளை பாராட்டியும் கருத்துகள் இடம் பெற்றிருந்தன.
எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு
இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அது என்ன என்பதை கவர்னர் ஆர்.என்.ரவி, தனது செயலாளர் கேட்டுத் தெரிந்துகொண்டவர்.அவையை விட்டு வெளியேறினார். . இதனால், மீண்டும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. கவர்னர் வெளியே சென்றபிறகு, அவை முன்னவர் துரைமுருகன் அந்த தீர்மானத்தை வாசித்தார். முதல் கூட்டத் தொடரின் தொடக்கமாக சட்டசபை மரபுகளின்படி கவர்னரின் உரை நிகழ்ந்துள்ளது.
என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ரவி
"இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட கவர்னர் உரையின் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும். வேறு எவையும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். இந்த நிலையில் நாளை காலை தமிழக சட்டப்பேரவை ஆளுநர் ரவி வரவுள்ளார்.
அப்போது தமிழக சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம், அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநர் தனது எதிர்ப்பை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலடு கொடுக்க திமுக அரசும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.