பொங்கல் தொடர் விடுமுறை.! போக்குவரத்து துறை இன்று வெளியிடப்போகும் சூப்பர் அறிவிப்பு- என்ன தெரியுமா.?

First Published | Jan 6, 2025, 7:06 AM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 6 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக அதிக பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால், கடந்த ஆண்டை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

pongal festivel

பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை என்றாலே விவசாயம் தான் அனைத்து மக்களுக்கு நினைவிற்கு வரும், விவசாயத்தை கொண்டாடும் வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14,15 மற்றும் 16ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக கூடுதலாக ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில், சொந்த கிராமங்களில் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.

சொந்த ஊருக்கு புறப்படும் மக்கள்

அதன் படி, ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்ட நிலையில் அரசு பேருந்துகளை நம்பி பொதுமக்கள் உள்ளனர். அந்த வகையில் பொங்கல் சிறப்பு பேருந்து குறித்து அறிவிப்பு இன்று வெளியாகிறது. கடந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு   பேருந்துகள் இயக்கப்பட்டது போல இந்த ஆண்டும் 20 ஆயிரம் பேருந்துகள்‌ இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 11ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Tap to resize

setc bus

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஜனவரி 14, 15, 16 மற்றும் 17 ஆகிய தொடர் விடுமுறை காரணமாகவும் அடுத்ததாக சனி, ஞாயிறு விடுமுறை காரணமாகவும் 6 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. எனவே கடந்த ஆண்டு மட்டும் பொங்கல் பண்டிகைக்காக அரசு பேருந்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். எனவே இந்தாண்டு இன்னும் அதிகமான மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டை விட இந்தாண்டு சிறப்பு பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்

மேலும் ஒரே இடத்தில் இருந்து வெளியூர்களுக்கு பொதுமக்கள் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதன் காரணமாக பல இடங்களில் பிரித்து பேருந்து இயக்கவும் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, திண்டுக்கல், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேட்டில் இருந்து வேலூர், ஆரணி, காஞ்சிபுரம் மற்றும் பெங்களூருக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

tamilnadu bus

ஆம்னி பேருந்துகள் கண்காணிக்க குழு

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பானது இன்று மதியம் வெளியாகிறது. மேலும் தனியார் பேருந்துகளும் ஆயிரக்கணக்கில் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் 30 குழுக்களை தமிழக போக்குவரத்து துறை நியமித்துள்ளது. இந்த குழு வரி நிலுவை அதிக சுமை பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்கள்டன் இயங்கும் பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் பேருந்துகளை சிறை வைக்கவும் போக்குவரத்து ஆணையரம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Latest Videos

click me!