தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் 11 லட்சத்து 50 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. 2,41,719 பேர் தேர்வு எழுதவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பொதுத் தமிழ் தொடர்பான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறியிருந்தனர். இதனால் குரூப்-4 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.