டிஎன்பிஸ்சி குரூப்-1 தேர்வர்களுக்கு! எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு!

Published : Jun 06, 2025, 11:41 AM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

PREV
14
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. எப்படியாவது அரசு பணியில் சேர்ந்து விட என்பதால் குறைந்த காலி பணியிடங்கள் என்றாலும் எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

24
90 காலிப்பணியிடங்கள்

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத் துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளில் 90 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்துக்கு 28 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

34
ஜூன் 15ம் தேதி தேர்வு

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வு ஜூன் 15ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுபவர்களுக்கான முதன்மை தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

44
ஹால் டிக்கெட் வெளியீடு

இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வகள் ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின்(OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories