தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போது வரை மாநிலம் முழுவதும் 11,754 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 4,954 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் 33 சதவீதத்துக்கும் மேல் சேதமடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 16,499 விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா மாவட்ட நிலவரங்களைப் பொறுத்தவரை, அங்கு மட்டும் 8,452 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 4,437 ஹெக்டேர் நிலங்களில் உள்ள நெற்பயிர்கள் 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்துள்ளதால், இந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.