வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : Oct 11, 2024, 07:58 AM ISTUpdated : Nov 09, 2024, 05:40 AM IST

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்களின் வரிசையில் மேலும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

PREV
15
வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - உடனே விண்ணப்பிக்க அழைப்பு
Mk Stalin

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேற்கல்வி முடித்து கல்லூரி படிப்பை தொடரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தகுதியானவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. மேலும் படித்து முடித்த மாணவர்கள் நல்ல நிறுவனங்களில் பணியில் சேரும் வகையில் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

25
Magalir urimai thogai scheme

இந்த வரிசையில் படித்து முடித்து வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையும் அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000 என 10 ஆண்டகளுக்கு வழங்கி வருகிறது. பிற இளைஞர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் கனிசமானத் தொகையை 3 ஆண்டுகளுக்கு வழங்கி வருகிறது.

35
Magalir Urimai Thogai

இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 31.12.2024ம் தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு காலண்டும் 10ம் வகுப்பு தோல்வி அடைந்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

45
Pudhumai Penn Scheme

விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளி எனில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தது ஒரு வருடம் நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் 10ம் வகுப்பு தோல்வி மற்றும் அதற்கு கீழான கல்வித் தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல் நிலை கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள் எனில் ரூ.1000 என உதவித் தொகை வழங்கப்படும்.

55
Pudhumai Penn Scheme

பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிக் இந்த உதவித் தொகை பெற முடியாது. தகுதியுள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பெற்றும் பூர்த்தி செய்து வழங்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories