மக்கள் மனதை இன்று பெரிய அளவில் உலுக்கிய இரண்டு விஷயங்கள் தான் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களின் மறைவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையாக செயல்பட்டு வரும் முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்த முரசொலி செல்வம் அவர்களது மறைவுவும். 84 வயது நிரம்பிய முரசொலி செல்வம், இன்று அக்டோபர் மாதம் 10ஆம் தேதி காலை காலமானார். அவருடைய மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மூத்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் செயல்பட்டு வந்தவர் முரசொலி செல்வம். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது மறைந்த கலைஞர் கருணாநிதி உடன் பிறந்த சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகன் தான் முரசொலி செல்வம். கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காலமாக அவர் காலமானார்.
"தமிழக அரசே போராடவிடு" சாம்சங் ஊழியர்கள் விவகாரம் - இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசம்!