ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. தேர்வு அட்டவணையை கொண்டு தேர்வுக்கு முன்கூட்டியே அறிந்துகொண்டு தேர்வர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடைப்படவுள்ள தேதி ஆகிய விவரங்களை வெளியிடப்படுகிறது.
இதையும் படிங்க: Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது தெரியுமா?
அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் குருப்-1, குருப்-4, தேர்வு ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு உள்பட மொத்தம் 7 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி 2025ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையின்படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு ஜூன் 15ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 13ம் தேதி நடத்தப்படும் என்றும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியாகும். தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Transport Department: சூப்பர் அறிவிப்பு! தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இவங்களுக்கு எல்லாம் இலவசம்!
தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும். தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குரூப் 4 தேர்வு பிரிவில் 2,208 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,704லிருந்து 8,932ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.