TN Transport Department: சூப்பர் அறிவிப்பு! தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இவங்களுக்கு எல்லாம் இலவசம்!

First Published | Oct 10, 2024, 3:06 PM IST

Tamilnadu Transport Department: தமிழக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாட்டுப்புறக் கலைஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல நிதி உதவி திட்டத்தால் பலன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில்  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் நாட்டுப் புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப் புற கலைஞர்கள் மற்றும் இதரக் கலைஞர்கள் பயணம் செய்யும்போது 50 சதவிகித பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் மேற்கொள்ளும் போது அவர்களின் இசைக் கருவிகள் மற்றும் தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: Velachery to Beach Train: ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்! சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை எப்போது?

Tap to resize

அதில், நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு
வருகிறார்கள்.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் வயது முதிர்வு காரணமாக, தனியாக பேருந்தில் பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகைகள் குறித்து 2010, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 01.06.2024 முதல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கட்டணமில்லா பயண சலுகை இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முறையாக நடத்துநர்கள் பின்பற்றவில்லை எனத் தெரிய வருகிறது.

இதையும் படிங்க: அக்கா கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு! கதறி அழுத கையோடு முதல்வர் ஸ்டாலின் போட்ட பதிவு!

தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள காரணத்தால், இனிவரும் காலங்களில் பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் மற்றும் ஓட்டுநர் / நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!