பூஜை நாட்களில் அதிர்ச்சி கொடுத்த கோயம்பேடு பூக்களின் விலை!!

First Published Oct 10, 2024, 2:20 PM IST

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை, குமரி, மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Flower Market

தமிழகம் முழுவதும் நாளைய தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை தமிழகத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களில் சாமி குப்பிடுவதற்காக பொதுமக்கள் பூக்கள், வாழை மரம், மஞ்சள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

RBI Limits on UPI: UPI பயனர்களுக்கு RBI கொடுத்த சர்ப்ரைஸ் தீபாவளி பரிசு!
 

Flower Market

இதனால் சாதாரண நாட்களைக் காட்டிலும் தற்போது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.900, கனகாம்பரம் ரூ.700, பன்னீர் ரோஸ் ரூ.120, ஜாதி மல்லி ரூ. 500, சாக்லேட் ரோஸ் ரூ.240 என விற்பனை செய்யப்படுகிறது. 

Latest Videos


Flower Market

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டில் மல்லி ரூ.1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.900, ஜாதி மல்லி ரூ.900, கனகாம்பரம் ரூ.1000, சம்பங்கி ரூ.400 என விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தடாலென சரிந்த விலை.. தங்கத்தில் முதலீடு செய்யலாமா? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த ஷாக்!

Flower Market

12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளதால் பூக்களின் விலை இன்று மாலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

click me!