Velachery to Beach Train: ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்! சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை எப்போது?

First Published | Oct 10, 2024, 1:38 PM IST

Velachery to Beach train: சென்னை கடற்கரை - எழும்பூர் வழித்தடத்தில் 4வது ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், வேளச்சேரி - கடற்கரை பறக்கும் ரயில் சேவை மீண்டும் நவம்பர் மாதம் முதல் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

chennai electric train

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமானது. இந்த வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு எது நடந்தாலும் இவர் தான் பொறுப்பு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Egmore Railway Station

இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்றொரு பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ முடியாத சூழல் நிலவி வந்தது. எனவே சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

Tap to resize

velachery to beach train

இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆகையால், 4வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன.

இதையும் படிங்க:  Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட துணை முதல்வர் உதயநிதி!

Southern Railway

இந்நிலையில், சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது ரயில் பாதை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் மீண்டும் பறக்கும் ரயில் சேவை நவம்பர் மாதம் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos

click me!