நாளுக்கு நாள் இவர்களுடைய போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் பல கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக இப்போது குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சாம்சங் ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். ஆனால் தமிழக அரசு சாம்சங் ஊழியர்களை போராட விடாமல் தடுப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சாம்சங் நிறுவனம் பன்னாட்டு நிறுவனம் என்பதால் அவர்களுடைய சங்கத்தில் சிஐடியு சங்கத்தை இணைக்க முடியாது என்றும், அந்த ஒரு கோரிக்கையை தவிர அவர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.