School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து சூப்பர் அறிவிப்பு வெளியானது!

First Published | Oct 11, 2024, 7:43 AM IST

School Holiday: தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளின் வேலை நாட்கள் 220ல் இருந்து 210 ஆக குறைக்கப்பட்டு, சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மக்களவை தேர்தல் காரணமாக 1 முதல் 9ம் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜுன் 1ம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

ஆனால், மக்களவை தேர்தல் முடிவு  மற்றும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2024-25ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில், பள்ளியின் வேலை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், 1 முதல் 12ம் வகுப்புக்கான தேர்வு காலங்கள், உயர்க்கல்விக்கான வழிகாட்டு வகுப்புகள், விடுமுறை போன்ற விவரங்களை வெளியிட்டது.

இதையும் படிங்க: TN Transport Department: சூப்பர் அறிவிப்பு! தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இவங்களுக்கு எல்லாம் இலவசம்!

Tap to resize

அதில் நடப்பு கல்வி ஆண்டில் மொத்த வேலை நாள் 210லிருந்து 220ஆக உயர்த்தப்பட்டிருந்தது. குறிப்பாக அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 220லிருந்து 210ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பு 2024 2025ம் கல்வியாண்டிற்கான திருத்திய பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில் பள்ளிகளில் கற்றம் கற்பித்தல்  வேலைநாட்கள் மொத்தம் 210க்கு குறையாமல் உள்ளதை அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியானது முக்கிய அறிவிப்பு!

குறிப்பாக இனி அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  டிசம்பர் 21ம் தேதி மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  Government Employees Bonus: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.6000 போனஸ் அறிவிப்பு!

மேலும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ம் தொடங்கி 23 முடிவடைகிறது. இதனையடுத்து டிசம்பர் 24ம் முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறையாகும். அடுத்ததாக, முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 9 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

Latest Videos

click me!