மழை செய்திகளை உடனுக்குடன் பெற Tamilnadu Alert: அரசின் செல்போன் செயலி அறிமுகம்

First Published Oct 13, 2024, 2:59 PM IST

தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மழை தொடர்பான செய்திகளை அறிய தமிழக அரசு சார்பில் புதிய மொபைல் செயலியை துணைமுதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu Rain Alert

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை முதல் 4 நட்களுக்கு ரொம்ப கவனமா இருங்க: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

Tamil Nadu Rain

மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மழைக்காலத்தில் 1913 என்ற அவசர உதவி எண்ணை மக்கள் அழைக்கலாம். கட்டுப்பாட்டு மையத்தில் சுமார் 150 பேர் 4 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

Latest Videos


Udhayanidhi Stalin

வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்கள் வாயிலாக மழை தொடர்பான தகவல்கள் பகிரப்படும். மேலும் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபடுகின்றனர். சென்னையின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் மழை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய  தமிழ்நாடு அலர்ட் (Tamilnadu Alert) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 

தீபாவளிக்கு 3 நாள் லீவு விடுங்க: பாஜக.வின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?

Chennai Rain

மின்வாரிய ஊழியர்கள், மெட்ரோ நிறுவனம் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்தும் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை தொடர்பான பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!