நாளை முதல் 4 நட்களுக்கு ரொம்ப கவனமா இருங்க: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

First Published | Oct 13, 2024, 1:40 PM IST

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை முதல் மிககனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

Weather Man

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகின்ற 15ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், முன் எப்போதும் இல்லாத அளவில் மழை அதிகப்படியாக பெய்யக் கூடும் என்று எச்சரித்துள்ளது. மேலும் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகின்ற 15ம் தேதி முதல் தலைநகர் சென்னையில் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Heavy Rain

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வெப்பச்சலனம் ஆரம்பித்துள்ளதாகவும், இதன் காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும். பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்: 8 ஆண்டுகளாக முதல் இடத்தை விட்டுகொடுக்காத தமிழகம்

Latest Videos


Chennai Rain

14ம் தேதி முதல் 17ம் தேதி வரை புதுச்சேரி - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லூர் ஆகிய பகுதிகளில் ஒரு நாளாவது நல்ல மழையை எதிர்பார்க்கலாம். குறைந்த காற்றழுத்தம் வடதமிழகம் அருகே நிலைகொண்டாலோ அல்லது அதன் நகரும் வேகம் குறைவாக இருந்தாலோ 3 - 4 நாட்களில் கனமழையை பெறலாம் என்று பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

Northeast Mansoon

தமிழநாடு மீனவர்கள் 17ம் தேதி வரை கடலுக்கு செல்லவேண்டாம். மேலும் அந்தந்த பகுதி வானிலை ஆய்வாளர்களின் அறிவுறுத்தலின் படி மீனவர்கள் கடலுக்கு செல்லும் பணியை மேற்கொள்ளலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகி ஒருங்கிணையும் வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை தொடரும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு 3 நாள் லீவு விடுங்க: பாஜக.வின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?

click me!