வேலை இல்லாதவர்களுக்கு ஜாலியோ ஜாலி.! வெளியானது தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

Published : Oct 13, 2024, 12:10 PM IST

தமிழக அரசு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கல்வித்தகுதியைப் பொறுத்து மாதம் 200 முதல் 600 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுடையவர்கள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

PREV
16
வேலை இல்லாதவர்களுக்கு ஜாலியோ ஜாலி.! வெளியானது தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு திட்டங்கள்

தமிழக அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்களை இளம் வயதிலையே தயார் செய்யும் வகையில் சிறப்பான கல்வி திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் ஏழ்மையின் காரணமாக பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்காகவே இலவச கல்வியானது வழங்கப்பட்டு வருகிறது.

இது மட்டும்மில்லாமல் காலை மற்றும் மதிய உணவு திட்டத்தினால் இன்று பல லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இது போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில், படிப்பு முடித்து வேலை தேடி வரும் இளைஞர்களுக்காவும் புதிய, புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

26

இலவச பயிற்சி வகுப்புகள்

அரசுப்பணியில் இணையவிரும்பும் இளைஞர்களுக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகிறது. அடுத்ததாக இந்த தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. அரசு பணி கிடைக்காத இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் பிரபல தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்.  அடுத்தாக வேலை கிடைக்காத இளைஞர்களுக்கான சிறப்பு திட்டமும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அது தான் மாதாந்திர உதவி தொகை திட்டமாகும்.

36
job opportunities

வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை

10 வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 600 ரூபாய் என வருடத்திற்கு 7200 ரூபாய் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறியுள்ளார்.

46

யாருக்கெல்லாம் உதவி தொகை

அந்த வகையில், எஸ்.எஸ்.எல்.சி தோல்வி/ எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி/எச்.எஸ்.சி/பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-32. கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் என தெரிவித்துள்ளார். 

56
job

விதிமுறைகள்

1. விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

2. விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், 所山 வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

66
job interview

உதவி தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதிவுடையவர் ஆவர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32. கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை-32. கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண். உதவித்தொகை எண் (MR. No.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories