நாடக கலைஞர்களுக்கு உதவி தொகை
மேலும் தமிழக கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட உதவிடும் வகையில் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாயானது 500 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் அடுத்ததாக புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்க் கலைகள், இலக்கியம், பண்பாடு சார்ந்த ஐந்து நாட்டிய நாடகங்கள் மற்றும் வரலாறு, புராணம், சமூகக் கருத்துக்கள் அடங்கிய ஐந்து மேடை நாடகங்கள் உருவாக்கி அரங்கேற்றிட தலா ரூ.1.50 இலட்சம் வீதம் ரூ. 15 இலட்சம் ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட கலைஞர்கள், கலைக்குழுக்கள் மற்றும் கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.