தீபாவளிக்கு 3 நாள் லீவு விடுங்க: பாஜக.வின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?

Published : Oct 13, 2024, 07:48 AM ISTUpdated : Oct 13, 2024, 08:25 AM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

PREV
15
தீபாவளிக்கு 3 நாள் லீவு விடுங்க: பாஜக.வின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?
tasmac shop

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பார் கலாசாரமும், ரௌடிகளின் வார் கலாசாரமும் மேலாங்கும் சாராய சாம்ராஜ்யமாக தமிழகம் மாறி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும், போலி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். 24 மணி நேர சட்டவிரோத பார்கள் தடுக்கப்பட்டு, அதனை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தீபாவளிக்கு மொத்தம் எத்தனை நாள் லீவு தெரியுமா? கருணை காட்டுமா அரசு?

25
tasmac

எந்த சூழலிலும் தமிழகத்தில் போதை கலாசாரத்தை ஊக்குவிக்கக் கூடாது. படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதனிடையே விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்திருப்பதாக வெளியாகும் தகவல், லட்சக்கணக்கான ஏழை  குடும்பங்களுக்கு துயரத்தை தரக்கூடிய, அவர்களின் சேமிப்பை குறைக்கக் கூடிய வழியாகும். குறிப்பாக தீபாவளி போனஸ் சமயத்தில் கிடைக்கும் பெருந்தொகையால் ஏழை, நடுத்தர குடும்பங்களில் தங்களின் குடும்பத்திற்கு தேவையான திருமணத்திற்கு காத்திருக்கும் பெண் குழந்தைகளுக்கு தேவையான அவசியமான பொருட்களை வாங்கும் நேரத்தில் அந்தப் பணத்தை கொள்ளையடிக் திட்டமிடுவது கொடுங்கோல் அரசாங்கம் நடத்துவதற்கு சமமானது.

35
tasmac

டாஸ்மாக் நிறுவனக் கொள்ளையால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட தமிழக தாய்மார்கள், தீபாவளி சிறப்பு மது விற்பனை இலக்கால் கண்ணீர் சிந்தும் நிலையை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தீபாவளி பண்டிகை திரு நாட்களில் முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலையிட்டு வரும் தீபாவளி பண்டிகை திருவிழா காலமான அக்டோபர் 30, 31, நவம்பர் 1 ஆகிய 3 தினங்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட வேண்டும்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு - எத்தனை நாள் தெரியுமா?

45

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை என 1000 ரூபாய் நம் வீட்டிற்கு கொடுத்து தமிழக அரசின் டாஸ்மாக் உரிமைத் தொகை என நம்மிடம் இருந்து மாதம் குறைந்தபட்சம் 5000 ரூபாய் கொள்ளையடிது வருவதை தமிழக மக்கள் உணர வேண்டும்.

55

தமிழக அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாக மாறி, மகளிர் வாழ்க்கையை சீர்குலைக்கும் அரசாக மாறி வருவதை உணர்ந்து, தமிழக மக்கள் அனைவரும் அரசியல் விழிப்புணர்வு அடைய வேண்டும். தங்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories