இந்த சூழலில் இந்திய வெதர்மேன் சஞ்சய் வெளியிட்டுள்ள சில தகவல்களின்படி காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று சென்னையில் நெருங்கி வருவதாகவும். அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சென்னை மக்கள் படகுகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார் அவர். தமிழகத்தின் அநேக இடங்களில் அக்டோபர் 15ம் தேதி துவங்கி கனமழை [பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.