1 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.! தேதி குறித்த தமிழக அரசு

First Published | Oct 13, 2024, 7:18 AM IST

தமிழக அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றப்பயணம் அழைத்து செல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. 

school students

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்புகள்

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு சார்பாக இலவச கல்வியானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இலவச சீருடை, காலணி, புத்தகப்பை, சைக்கிள், இலவ பேருந்து அட்டை  போன்றவை வழங்கப்படுகிறது.

மேலும் மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் தமிழக அரசின் சூப்பர் திட்டமாக காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழ்மையான மாணவர் பயன்பெற்று வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு ஸ்காலர் ஷிப்பும் வழங்கப்பட்டுவருகிறது. இதே போல கல்வித்துறைக்கு என பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  

பள்ளிகளுக்கு விடுமுறை

அரசு பள்ளியில் படித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களது அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான் அந்த வகையில், மாணவர்களுக்கு 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களில் இருந்து 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறஐ அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில்  தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Latest Videos


school student

மாணவர்களுக்கான போட்டிகள்

மாணவ,மாணவிகளுக்கு களிமண் பொம்மைகள் செய்தல், மணல் சிற்பம், பலகுரல் பேச்சு, மாறு வேட போட்டி, நாட்டுப் புறப்பாடல், நகைச்சுவை, கதை சொல்லுதல், சிலம்பம் சுற்றுதல்பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, மாறு வேட போட்டி, நாட்டுப் புறப்பாடல், பரதநாட்டியம், நடனம்  போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.  கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் கடந்த ஆகஸ்ட் 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன.இதன் அடுத்தக்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறுவள மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறுவள மையப் போட்டிகள் 17,10,24 முதல் நடத்தப்பட்டு, 22,10,24 முதல் 24,10,24 வரை வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை

அதன் படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறுவள மையப் போட்டிகள் 17,10,24 முதல் நடத்தப்பட்டு, 22,10,24 முதல் 24,10,24 வரை வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 15,10,24 முதல் 17,10,24 வரை வட்டார அளவிலான போட்டிகளும், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 21.10.24 முதல் 24.10.24 வரை வட்டார அளவிலான போட்டிகளும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு 22,10,24 முதல் 24.10.24 வரை வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மாணவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு

மேலும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும் எனவும்,  கலைத்திருவிழா போட்டியில் தரவரிசையில் முதன்மை இடத்தை பிடிக்கும்  25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்று பள்ளிக்கல்வித்துறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

School Teacher: அக்டோபர் 15ம் தேதி வரைக்கும் தான் டைம்! ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!

click me!