மாநாடு மேடை பணி தொடங்கியது
அதன் படி விஜய் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநாடு பந்தல் பணிகள் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வந்தது. சுமார் 50ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் நிபந்தனைகளின் படி அருகில் உள்ள கிணறுகளை மூடும் பணியும் தொடங்கியது.
மேலும் மாநாட்டிற்காக சுகாதாரக்குழுவில் 56 பேரும், மாநாட்டிற்கான போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் குழுவில் 104 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாநாடு பந்தல் அமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவாக மாநாடு பந்தல் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.