பணிக்காக வெளியூர் பயணம்
படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமலும், சொந்த ஊரில் உரிய வருமானம் இல்லாத காரணத்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு பிழைப்பை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக பெற்றோர்களை விட்டும், உறவினர்களை விட்டும் தனியாக செல்லும் நிலை தற்போது உள்ளது. எனவே ஏதேனும் விஷேச நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள்.
குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் கிடைக்கும் விடுமுறைக்கு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள். அந்த வகையில் கடந்த பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேருந்து, ரயில் மற்றும் சொந்த கார்களின் மூலம் பயணம் செய்தனர்.