தமிழக அரசு தொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கடன் உதவி அறிவித்துள்ளது. 3-5 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன், 7-8% வட்டி விகிதத்தில் இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், மக்கள் சொந்தாக முன்னேறும் வகையில் தொழில் தொடங்க பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக மகளிர் சுய உதவிக்குழு கடன், மகளிர் தனி நபர் கடன் திட்டம்,
விவசாயிகளுக்கு கடன் உதவி திட்டம், கறவை மாடுகள், கோழிகள் வளர்க்க கடன் உதவி திட்டம். சொந்த தொழில் தொடங்க கடன் உதவி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தனிநபர் சொந்தமாக தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது.
24
25 லட்சம் வரை கடன் உதவி திட்டங்கள்
இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TABCEDCO) சார்பில் தனி நபர் கடன் திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் வரை வழங்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு தொழில், வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு கடனுதவி வழங்கப்பட இருப்பதாகவும், இந்த தனி நபர் கடனை திரும்ப செலுத்தும் காலம் 3-5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 25 லட்சம் வரை கடன் உதவி திட்டத்திற்கு ஆண்டு வட்டி விகிதம் 7-8 சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயனாளியின் பங்கு 5 சதவீதம் என கூறப்பட்டுள்ளது.
34
கடன் பெற தகுதிகள் என்ன.?
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
வயது: 18 -60 வரை
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.
டாப்செட்கோவின் இணையதளம் www.tabcedco.tn.gov.in
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் /கட்டுறவு கடன் சங்கங்கள். ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.