Published : Aug 04, 2025, 07:42 AM ISTUpdated : Aug 04, 2025, 12:15 PM IST
ஆகஸ்ட் மாதத்தில் வரும் 3 நாட்கள் தொடர் விடுமுறையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வெளியூர் பயணம் மற்றும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு அதிகரித்துள்ளது.
இயந்திரங்களின் வேகங்களுக்கு நிகராக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு வார விடுமுறை தான் சற்று ஓய்வு எடுக்கும் நாளாகும், அதிலும் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் விடுமுறை வந்தால் கேட்கவா? வேண்டும். ஒரே குஷி தான். அந்த வகையில் உறவினர்களை விட்டும், சொந்த ஊரை விட்டும் பல லட்சம் பேர் தினந்தோறும் பணிக்காக வெளியூர்களுக்கு செல்கிறார்கள்.
இந்த நிலையில் வார விடுமுறையோடு சேர்ந்து விடுமுறை கிடைத்தால் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்குவார்கள். அந்த வகையில் வரும் வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளதால் இப்போதே வெளியூர் பயணம் தொடர்பாக திட்டமிட்டு வருகிறார்கள்.
24
மாணவர்களுக்கு ஏமாற்றம் அளித்த ஜூன், ஜூலை
இதே போல மாணவர்ளும் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த நிலையில் அடுத்தடுத்து வந்த மாதங்களில் வார விடுமுறை தவிர்த்து வேறு விடுமுறைகள் கிடைக்கவில்லை. அதிலும் கடந்த மாதம் மொகரம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால் அந்த விடுமுறையும் மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு குஷியான மாதமாக மாறியுள்ளது. இந்த ஒரு மாதம் மட்டும் 12 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.
34
ஆகஸ்ட்டில் தொடர் விடுமுறை
அந்த வகையில் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 15, 16 மற்றும் 17ஆம் தேதி என தொடர் விடுமுறை உள்ளது. அதாவது ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா, ஆகஸ்ட் 16 சனிக்கிழமை கிருஷ்ணஜெயந்தி, ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்கள். தனியார் நிறுவன ஊழியர்கள் வெளியூர் பயணத்திற்கும், சுற்றுலா செல்வதற்கும் திட்டமிட தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில், பேருந்துகளில் தற்போது அதிக கட்டணம் கொடுத்து முன்பதிவு செய்து வருகிறார்கள். மேலும் அரசு சார்பாகவும் சிறப்பு பேருந்தானது இயக்கப்படவுள்ளது.
இந்த 3 நாட்கள் மட்டும் விடுமுறை இல்லாமல் ஆகஸ்ட் மாதம் மற்றொரு விடுமுறையும் வரவுள்ளது. அந்த வகையில் வருகிற 27ஆம் தேதி புதன் கிழமை விநாயகர் சதூர்த்தி வரவுள்ளது.
இந்த விழாவையொட்டி விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இது மட்டும் இல்லாமல் ஒரு சில மாவட்டங்களில் கோயில், தேவாலய திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.