புளிய மரத்தில் மோதி கார் விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! மகள் சீரியஸ்!

Published : May 20, 2025, 01:45 PM IST

கேரளாவில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்த குடும்பத்தினர் மீது கார் விபத்து ஏற்பட்டது. இதில் கணவன், மனைவி மற்றும் மூத்த மகள் உயிரிழந்தனர். இளைய மகள் படுகாயமடைந்தார்.

PREV
14
கேரளாவில் இருந்து திரும்பிய போது விபத்து

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது 2 மகள்கள் ஹேமிநேத்ரா (15), மௌன ஸ்ரீ (10). இவர்கள் நவரசம் பள்ளியில் 10 மற்றும் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவமனை குவாட்டர்ஸில் வசித்து வந்துள்ளனர்.

24
புளிய மரத்தில் மோதிய கார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று காரில் ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

34
கார் விபத்தில் 3 பேர் பலி

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராஜா, அவரது மனைவி ஜானகி, மூத்த மகள் ஹேமிநேத்ரா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மௌன ஸ்ரீ உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44
தூக்க கலக்கத்தில் விபத்து?

மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தூக்க கலக்கத்தில் விபத்து நிகழ்ந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories