Published : May 20, 2025, 12:54 PM ISTUpdated : May 20, 2025, 02:44 PM IST
தமிழகத்தில் விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு கடன் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு ரூ.4,200 கோடியையும், வட்டித் தொகை ரூ.176 கோடியையும் NABARD-க்கு விடுவித்துள்ளது.
விவசாயம் தான் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் சோற்றில் மக்கள் கை வைக்க முடியும், எனவே விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. மானியத்தில் விவசாய உபகரணங்கள், மானியத்தில் உரம்,
மானியத்தில் விதைகள், மின்சார மானியம், ஏற்றுமதி மானியம், ஓய்வூதியத் திட்டம், நேரடி விற்பனை நிலையம்,விவசாய உள்கட்டமைப்பு மானியம் என பல திட்டங்கள் நடமுறையில் உள்ளது.
24
விவசாயிகளுக்கான திட்டங்கள்
குறிப்பாக கடன் மானியம் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விவசாயிகள் விவசாய கடன்கள் பெறும்போது, கடனுக்கான வட்டி மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்துவது எளிதாகிறது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசு வழங்கும் பல சலுகைகளை விவசாயிகள் எளிதாக பெற முடிகிறது.
இது போன்ற பல திட்டங்கள் மட்டுமில்லாமல் விவசாய கடன் தள்ளுபடி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது போன்ற பல்வேறு திட்டத்தின் காரணமாக சாகுபடியான ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2019-20 நிதி ஆண்டில் 1.47 கோடி ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 3.23 லட்சம் ஏக்கர் அதிகரித்து, 2024-25-ம் ஆண்டில் 1.50 கோடி ஏக்கராக உயர்ந்துள்ளது.
34
விவசாயிகளுக்கான கடன் திட்டங்கள்
மேலும் விவசாயி கடன் அட்டை திட்டத்தின் கீழ் 7% வட்டியில் பயிர் சாகுபடிக்கான செலவுகளை மேற்கொள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் குறுகிய கால பயிர்க் கடன்களை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.2 இலட்சம் வரை பிணையம் இல்லாமலும் ரூ.3 இலட்சம் வரை பிணையம் பெற்றும் வழங்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு அரசு ரூ.4,200 கோடியையும், வட்டித் தொகை ரூ.176 கோடியையும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு (NABARD) விடுவித்துள்ளது. மேலும் 2021-22 நிதியாண்டிலிருந்து 2024-25 வரை, கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக ரூ.7,180 கோடியை தள்ளுபடியாகவும், கூட்டுறவு நிறுவனங்களுக்கான நிலுவையில் உள்ள தள்ளுபடிக்கான வட்டியாக ரூ.1,643 கோடியையும் விடுவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.