Transport Department: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! போக்குவரத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

First Published Nov 1, 2024, 7:01 PM IST

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவையொட்டி, சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Tiruchendur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக  போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நாளை அதாவது நவம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Soorasamharam

இந்நிலையில், திருச்செந்தூரில் நடைபெறுவதையோட்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  நவம்பர் 7ம் தேதி (வியாழக்கிழமை) சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவம்பர் 06ம் தேதியன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க: Car Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் சென்னையில் நடந்த கோர விபத்து! சீரியல் பிரபலத்தின் மகன் பலி!

Latest Videos


Government Bus

தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொதுமக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி வருகின்ற 07ம் தேதி வியாழக்கிழமை சூரசம்ஹாரம் வருவதால் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Special Buses

இதனடிப்படையில் வருகின்ற 06ம் தேதி புதன்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர். ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கு மற்றும் 07ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  School Teacher Promotion: தீபாவளி அதுவுமா! ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

Devotees

மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!