சிங்கார சென்னை கார்டு வாங்குவது இனி ரொம்ப ஈசி: 20% கட்டண சலுகையில் பயணிக்கலாம்

First Published | Nov 1, 2024, 5:33 PM IST

சிங்கார சென்னை கார்டை பெறுவதை சென்னை மெட்ரோ நிர்வாகம் தற்போது எளிதாக்கி உள்ள நிலையில், இதற்கு மெட்ரோ பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குவிந்து கிடக்கும் தொழில் நிறுவனங்களில் பணியாற்ற தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு நாளும் மக்கள் குவிந்து வருகின்றனர். பொதுமக்களின் பயண வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 7 மெட்ரோ நிலையங்களுடன் கோயம்பேடு முதல் ஆலந்தூர் இடையே இந்த ரயில் தனது சேவையைத் தொடங்கியது.

தற்போது கொஞ்சம், கொஞ்சமாக விரிவு படுத்தப்பட்டு 2 வழித்தடங்களில் மொத்தமாக 54 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ தனது சேவையை வழங்கி வருகிறது. சிறிது சிறிதாக மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். பயணிகளை தொடர்ந்து அதிகப்படுத்தும் நோக்கில் மெட்ரோ நிர்வாகமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

Tap to resize

chennai metro train

அந்த வகையில் கட்டண சலுகை, விழாக்கால சலுகை, முக்கிய நாட்களில் கூடுதல் ரயில்களை இயக்குவது, கூடுதல் நேரம் ரயில்களை இயக்குவது, அதிகமுறை பயணிப்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் என மெட்ரோ நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. மெட்ரோ நிர்வாகத்தின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் ஸ்மார்ட் கார்டு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், QR-CODE மூலம் டிக்கெட் பெறுவர்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மெட்ரோவில் பயணிப்பவர்களின் வசதிக்காக சிங்கார சென்னை அட்டையை பெறுவதை சென்னை மெட்ரோ நிர்வாகம் தற்போது எளிதாக்கி உள்ளது. சிங்கார சென்னை அட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை 4 லட்சம் சிங்கார சென்னை அட்டை விநியோகம் விநியோகிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிங்கார சென்னை அட்டையை பெற KYC சரிபார்ப்பு தேவைப்பட்டது. இது மெட்ரோ பயணிகளுக்கு சற்று சௌகரியமற்ற சூழலை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது சிங்கார சென்னை அட்டையை பெற KYC சரிபார்ப்பு தேவையில்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் தங்கள் செல்போன் எண்ணை வழங்கி OTP மூலம் உறுதிப்படுத்தினால் மெட்ரோ நிலையங்களில் சிங்கார சென்னை அட்டையை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயி்லகளில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் கோர்டு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையான பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

Latest Videos

click me!