Car Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் சென்னையில் நடந்த கோர விபத்து! சீரியல் பிரபலத்தின் மகன் பலி!

Published : Nov 01, 2024, 05:01 PM ISTUpdated : Nov 01, 2024, 05:03 PM IST

Chennai Car Accident: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் லித்திஷ், தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பிறகு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார்.

PREV
14
Car Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் சென்னையில் நடந்த கோர விபத்து! சீரியல் பிரபலத்தின் மகன் பலி!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவரது மகன் லித்திஷ் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் லித்திஷ் தீபாவளி கொண்டாட்டத்தை முடித்து விட்டு காரில் தனது நண்பர்கள் ஜெயகிருஷ்ணண் மற்றும் வெங்கட் ஆகியோருடன் பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள விளையாட்டு திடலுக்கு காரில்  சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

24

அப்போது, வேளச்சேரி - தரமணி 100 அடி சாலை விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

34

இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற இளைஞர் லித்தீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த ஜெய் கிருஷ்ணன் மற்றும் வெங்கட் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

44

இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த லித்தீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ 

click me!

Recommended Stories