Chennai Train Passengers: 14 மாதங்களுக்கு பிறகு டீ என்ட்ரி! குஷியில் சென்னை ரயில் பயணிகள்!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகள் நிறைவடைந்து, பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், 14 மாதங்களாக பெரும் சிரமத்திற்கு உள்ளான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Good news for Chennai train passengers after 14 months tvk

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமானது. இந்த வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

Good news for Chennai train passengers after 14 months tvk

ஆனால், இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. 4வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ முடியாத சூழல் நிலவி வந்தது. எனவே சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையும் படிங்க: TASMAC Shop: டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் குடிமகன்கள்!


இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.274.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் பணிகள் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை 
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இதனால், அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிபூண்டி பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் மார்க்கத்தில் ரயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க: Transport Department: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு பேருந்துல போறீங்களா? அப்படினா இதோ முக்கிய செய்தி!

இந்நிலையில், சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் பறக்கும் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. 14 மாதங்களாக பெரும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறுமார்க்கத்தில் 45 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ரயில்கள் இயக்கப்படும் நேர அட்டவணையையும் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.

Latest Videos

click me!