School student!சென்னையில் அதிர்ச்சி!அடுத்தடுத்து மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள்! அலறிய பெற்றோர்! நடந்தது என்ன?

First Published | Oct 25, 2024, 5:09 PM IST

School students: சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மர்ம வாயு தாக்கியதில் பல மாணவர்கள் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூரில் கிராம தெரு பகுதியில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தனர். 

அப்போது பள்ளியில் திடீரென கெமிக்கல் வாசம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து மாணவர்கள் மயங்கினர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனே பள்ளி மாணவர்களை அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விஷயத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறி கூச்சலிட்டப்படியே பள்ளி முன் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க: Tamilnadu Government: விவசாயிகளுக்கு ரூ.5000 கொடுக்கும் தமிழக அரசு! அட்டகாசமான அறிவிப்பு!

Latest Videos


பின்னர் மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: November Month School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வெளியான தகவல்!

 உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகாமையில் உள்ள  தொழிற்சாலைகளில் இருந்து ஏதேனும் வாயு வெளியேறியதா அல்லது பள்ளியின் உள்ளேயே இருக்கும் ஆய்வகத்தில் இருந்து வாயு வெளியேறியதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே காலை 10.30 மணியளவில் இருந்து வாயு நெடி வெளியேறிய நிலையில் உடனடியாக மாணவர்களை வெளியேற்றாதது ஏன் என பள்ளி ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

click me!