புனித ஜார்ஜ் கோட்டையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. மொத்தம் 11 தளங்களைக் கொண்டது. இதில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வழக்கம்போல், ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். கட்டிடத்தின் முதல் தளத்தில், வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலகம் இயங்கி வருகிறது.
இதனையடுத்து காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேட்டியளித்த அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டடம் உறுதித் தன்மையுடன் உள்ளது. புதிய டைல்ஸ்கள் உடனடியாக மாற்றப்படும் என்றார்.