இந்தியாவிலேயே முதன் முறையாக வந்தே பாரத் ரயில்களின் ஸ்லீப்பர் கோச் பெட்டிகள் ஐசிஎஃப் ரயில்வே இணைப்பு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 823 பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயிலில் ஒரு முதல் ஏசி பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளும், 11 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளும் உள்ளது. முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 24 பயணிகளும், இரண்டாவது வகுப்பு ஏசி பெட்டிகளில் 188 பயணிகளும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 611 பேரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
vande bharat train
இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அதி நவீன வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளிலும் சிசிவிடி கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து பெட்டிகளிலும் தீ அணைப்பு கருவி மற்றும் ஒவ்வொரு படுக்கைக்கு அருகே அவசர காலங்களில் ரயில்களை நிறுத்தும் பட்டன் உள்ளது.
vande bharat train
ஒவ்வொரு படுக்கைக்கு அருகே சார்ஜிங் கேபிள் மற்றும் லைட் உள்ளது. செல்போன் மற்றும் பொருட்கள் வைப்பதற்காக ஸ்டாண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதற்கு தானியாங்கி கதவுகள் மற்றும் ஒவ்வொரு பெட்டிக்கும் Emergency Talk Back Unit என்ற கருவி உள்ளது. இதன் மூலம் முன்பகுதியில் உள்ள லோகோ பைலட் இடம் பேச முடியும் அதற்கு அவர்கள் பதில் அளிக்க கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எந்தந்த இடத்தில் ரயில் நிற்கப்படும் என்ற தகவலை பார்ப்பதற்காக எல்இடி டிஸ்ப்ளே, முக்கிய தகவலை அளிப்பதற்காக ஸ்பீக்கர்களும் உள்ளன.
vande bharat train
குறிப்பாக இந்த ரயில்களில் உள்ள கதவுகள் அனைத்தும் தானியாங்கி மூலமாக செயல்படக்கூடியது. ஸ்லீப்பர் கோச் கொண்ட வந்தே பாரத் ரயிலில் பல கட்ட சோதனை முடிந்து, வரும் ஜனவரி இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
ஏற்கனவே இந்த வில்லிவாக்கம் ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலைகளில் ஐசிஎப்-ல் 77 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளது. தற்போது முதல் முறையாக வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில் பெட்டிகளை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.