Traffic Diversion : சென்னை வாகன ஓட்டிகளே! தப்பி தவறிகூட அந்த பக்கம் போயிடாதீங்க! நாளை போக்குவரத்து மாற்றம்!

First Published | Oct 20, 2024, 8:05 PM IST

அக்டோபர் 21ம் தேதி சென்னை காவலர் நினைவிடத்தில் நடைபெறும் காவலர் நீத்தார் நினைவு நாள் நிகழ்வையொட்டி, நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னையில் மெட்ரோ பணி, போக்குவரத்து நெரிசல், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நீத்தார் நினைவு நாள் அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Latest Videos


இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பதை ஒட்டி, நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 

சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு- அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம், எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

MRTS X R.K.Salai Jn-ஐ தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது, காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் MRTS சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை - காமராஜர் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகரப் பேருந்து (21G) ராயப்பேட்டை 1 பாயின்ட் - மியூசிக் அகாதெமி பாயின்ட் - டிடிகே சாலை - இந்தியன் வங்கி Jn - ராயப்பேட்டை நெடுஞ்சாலை - ஜிஆர்எச் பாயின்ட் - அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கதீட்ரல் ரோடு லைட் ஹைவுஸ் நோக்கி வரும் மாநகரப் பேருந்து (27 D) வி.எம்.. தெருவில் திருப்பிவிடப்பட்டு - லஸ் சந்திப்பு - லஸ் சர்ச் சாலை - D' ஸ்லிவா சாலை - பக்தவச்சலம் சாலை - Dr. ரங்கா சாலை - பீமனா கார்டன் jn - சிபி ராமசாமி சாலை - சீனிவாசன் தெரு - ஆர்.கே. மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!