ரெஸ்ட் கொடுத்த கனமழை: மாற்று பாதையில் அறிவிக்கப்பட்ட முக்கிய ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்

First Published | Oct 16, 2024, 10:58 AM IST

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆந்திராவை நோக்கி சென்ற நிலையில் சென்னையில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரயில் நிலையம் இடையேயான பாலம் நீரில் மூழ்கியது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட இருந்த சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சரசரவென வீழ்ந்த தக்காளியின் விலை: நிம்மதி பெருமூச்சி விட்ட இல்லத்தரசிகள்

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆந்திராவை நோக்கி நகர்வதால் சென்னையில் படிப்படியாக மழையின் அளவு குறையத் தொடங்கி உள்ளது. இதனால் பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் பாலத்தை சூழ்ந்திருந்த மழை நீர் வடிந்துள்ளது. இதனால் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos


Special Train

நீலகிரி, ஏற்காடு, காவேரி, சேரன் உள்ளிட்ட ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பதிலாக மாற்று ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீர் வடிந்தைத் தொடர்ந்து ரயில்கள் வழக்கம் போல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை விரைவு ரயில் காலை 10 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

அப்பாடா.! சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வெதர் மேன்- தப்பியதா தலைநகரம்
 

திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயில் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்கள் வேறு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வழக்கம் போல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைசூரு - சென்னை காவேரி ரயில் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

click me!